தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள் + "||" + Indian Army displays show of strength with M77 Ultra Light Howitzer demo at Nashik

இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்

இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்
இந்திய ராணுவத்தில், கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாசிக்,

1980களில் சுவீடன் தயாரிப்பான போபர்ஸ் பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எம்-777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர் (M777 Ultra-Light Howitzer) மற்றும் தென்கொரிய தயாரிப்பான கே9 வஜ்ரா-டி (K9 Vajra-T) ஆகிய பீரங்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னிலையில், இந்த பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன.

இதேபோல, 2016 நவம்பரில் எம்777 அல்ட்ராலைட் ஹோவிட்சர் ரகத்தை சேர்ந்த 145 பீரங்கிகளை வாங்க 737 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பீரங்கிகள் நேரடியாக இறக்குமதி செய்யப்படும். 120 பீரங்கிகள் மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். 4 டன் எடை மட்டுமே கொண்ட இந்த எம்777 ரக பீரங்கிகளை ஹெலிகாப்டர் மூலம் மலைப்பாங்கான பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரலில், தென்கொரியாவின் ஹன்வா டெக்வின் (Hanwa Techwin) நிறுவனமும், இந்தியாவின் எல் அண்டு டி நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, கே9 வஜ்ரா-டி (K9 Vajra-T) ரகத்தை சேர்ந்த 10 பீரங்கிகள் நேரடியாக தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். 90 பீரங்கிகளை எல் அண்டு டி இந்தியாவில் தயாரித்து வழங்கும். 100 பீரங்கிகளுக்கான தொகை மொத்தம் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய ராணுவத்தினரின் சீருடையில் விரைவில் மாற்றம்
வானிலைக்கு ஏற்றவாறு இந்திய ராணுவத்தினரின் சீருடையில் சில மாற்றங்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
2. இந்திய ராணுவம் மோடிக்கானது கிடையாது, இந்திய தேசத்திற்கானது - அம்ரீந்தர் சிங்
இந்திய ராணுவம் மோடிக்கானது கிடையாது, இந்திய தேசத்திற்கானது என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
3. காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடியில் பாகிஸ்தான் தளம் அழிப்பு; கொடி தலைகீழாக பறந்தது
காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டு உள்ளது.
4. ‘இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது’ கவிதை நடையில் ராணுவம் டுவிட்டரில் செய்தி
பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் இரு நாட்டு எல்லை பகுதியிலும் போர் பதட்டம் நிலவுகிறது.
5. இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.