தேசிய செய்திகள்

விவாகரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் : லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் அடம்! + "||" + Tej Pratap Yadav in Haridwar says wont return home till family backs divorce

விவாகரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் : லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் அடம்!

விவாகரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் : லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் அடம்!
விவாகாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் என லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
பாட்னா, 

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பீகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணங்கள் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் விவாகாரத்து கோரி லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை நவம்பர் 29-ம் தேதி பாட்னா குடும்பநல கோர்ட்டு விசாரிக்கிறது.
 
தேஜ்பிரதாப் யாதவ் முடிவு அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் அரசியல் லாபத்திற்காக நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டினார். ராஞ்சியில் உள்ள லாலுவை சந்தித்த பின்னர் புத்தகயாவில் தேஜ்பிரதாப் யாதவ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அவர், ஹரிதுவாரில் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. விவாகாரத்து முடிவுக்கு குடும்பத்தார் ஆதரவளிக்கவில்லை என்றால் திரும்ப மாட்டேன் என்று கூறியுள்ளார். 
 
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், தேஜ்பிரதாப் முடிவால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “எங்களுடைய பிரச்சனையை சரி செய்ய முடியாது. என்னுடைய திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே என்னுடைய பெற்றோர்களிடம் வலியுறுத்தினேன். ஆனால் என்னுடைய பேச்சை அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய பேச்சை அவர்கள் கேட்காத வரையில் நான் எப்படி வீட்டிற்கு திரும்ப முடியும்?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.  “என்னுடைய சகோதரன் தேஜஸ்வி யாதவ் பீகாரில் முதல்-அமைச்சர் ஆவார். மகாபாரத போரில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உதவியது போன்று என்னுடைய சகோதரனுக்கு உதவி செய்வேன்” என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே இச்செய்தியை மிகைப்படுத்ததாதீர்கள் என ஊடகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
2. மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
3. சபரிமலை விவகாரம்: கேரளாவில் வன்முறை நீடிப்பு
சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
4. பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: சபரிமலை பயணத்தை பாதியில் ரத்து செய்த அய்யப்ப பக்தர்கள்
சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பயணத்தை குமரி பக்தர்கள் பாதியில் ரத்து செய்தனர். மேலும் மாலையை கழற்றி விரதம் முடித்தனர்.
5. மேகதாது அணை கட்டும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு
மேகதாது அணை கட்டுவதற்கான செயல்திட்ட முன்வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.