சினிமா செய்திகள்

ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் + "||" + 2Point0 Coming Soon in Tamil Rockers

ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்

ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
சென்னை,

‘சர்கார்’ படம் வெளியாகும் முன்பே கதை திருட்டு, அரசியல் படம் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. இதனாலேயே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ‘தீபாவளியன்று வெளியாகும் ‘சர்கார்’ படத்தை எச்.டி. பிரிண்டில் அன்றைய தினமே வெளியிடுவோம்’ என தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெளிப்படையான சவால் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.

சவால் விட்டிருந்தபடி சர்கார் திரைப்படம் நேற்றுமுன்தினம் மாலை இணையதளத்தில் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வேகவேகமாக பகிரப்பட்டது. இதனால் ஏராளமானோர் ‘சர்கார்’ திரைப்படத்தை திருட்டுத்தனமாக ‘டவுன்லோடு’ செய்து கொண்டனர்.

இந்த நிலையில்  தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட மேலும்  ‘டுவிட்டர்’ பதிவில் சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின்  2.0  படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்  விடுத்து உள்ளனர்.

சர்கார் படம் வெளியான அன்றே இணையதளத்தில் பதிவேற்றியது போல் ரஜினியின் 2.0 படமும் வெளியீடு என  தமிழ் ராக்கர்ஸ் டுவிட் செய்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்
ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo
5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.