தேசிய செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி சத்தீஷ்காரில் ராகுல் காந்தி பிரசாரம் + "||" + Will waive farm loans in 10 days of coming to power Rahul

ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி சத்தீஷ்காரில் ராகுல் காந்தி பிரசாரம்

ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி சத்தீஷ்காரில் ராகுல் காந்தி பிரசாரம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராய்பூர், 

 
பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் சத்தீஷ்கார் மாநிலத்தில், வருகிற 12–ந் தேதி மற்றும் 20–ந் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு பிரசாரம் செய்தார். ராஜ்நந்தகோன் நகரில் ராகுல் காந்தி பிரசார கூட்டத்தில் பேசுகையில், பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி தொழில் அதிபர்களின் உத்தரவை பெற்று அதன்படியே செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தி பேசுகையில், பா.ஜனதா போல், பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஆட்சியை பிடித்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை காப்பாற்றினோம்.
அதுபோன்று சத்தீஷ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், 10 நாட்களில் விவசாயியின் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு போனசும் வழங்கப்படும் என்றார். தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச.4 ஆம் தேதி விசாரணை
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
2. பெண் காவலர்கள் வயது சான்றை ஆய்வு செய்தோம்-ஆர்.எஸ்.எஸ்.; அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ்
சபரிமலையில் பெண் காவலர்களின் வயது சான்றை ஆய்வு செய்தோம் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் வல்சனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
3. மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு : ராகுல் காந்தி, குமாரசாமி, மு.க ஸ்டாலின் இரங்கல்
மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4. சட்டசபை தேர்தல்: சத்தீஷ்காரில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு
சத்தீஷ்காரில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளநிலையில், அங்கு பாதுகாப்பு படையினர் ஒரு லட்சம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்
5. சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங். தலைவர் ராகுல் காந்தி வழிபாடு
சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.