தேசிய செய்திகள்

அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு + "||" + Low pressure area over Andaman sea likely to become depression

அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு

அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து உள்ளது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் நாளை மழை பெய்யும்.  ஓரிரு இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில்) கனமழை பெய்யும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலேசியா தீபகற்ப பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறுகிறது. வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. புயல் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12–ந்தேதி சரியாக கணித்து சொல்ல முடியும். இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும். கண்டிப்பாக மழை இருக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயல் எதிரொலி: 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
’கஜா’ புயல் எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
2. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
3. 48 மணி நேரத்தில் வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
48 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கம் - கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.