உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு? செய்தி நிறுவனம் தகவல் + "||" + The dissolution of the Sri Lankan parliament? - AFF news agency information

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு? செய்தி நிறுவனம் தகவல்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு?
செய்தி நிறுவனம் தகவல்
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26-ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரமசிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரமசிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.


இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரனில் விக்ரமசிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16-ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இப்போது நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.

இலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

இந்நிலையில் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வந்த சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
2. உலகைச்சுற்றி...
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பதற்கு, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
3. இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை : மு.க ஸ்டாலின்
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடுகிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
5. முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது: நாடாளுமன்றத்தை 7-ந்தேதி கூட்ட சிறிசேனா சம்மதம்
இலங்கையில் நாடாளுமன்றத்தை 7-ந்தேதி கூட்டுவதற்கு அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனால் நாடாளுமன்ற முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது.