தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை - மத்திய அரசு விளக்கம் + "||" + RBI does not ask for Rs.3.6 lakh crore from the Reserve Bank of India - Central government interpretation

ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை - மத்திய அரசு விளக்கம்

ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை - மத்திய அரசு விளக்கம்
ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,

மத்திய பா.ஜனதா அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவலை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும் வெளியிட்டதுடன், மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பணம் கேட்டுள்ளதாக பல்வேறு தவறான தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால் அரசிடம் போதுமான நிதி கையிருப்பு உள்ளது. எனவே ஊடகங்களில் வெளியானது போல ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியோ அல்லது ரூ.1 லட்சம் கோடியோ நிதி கேட்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘அரசின் நிதி பற்றாக்குறை கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்தது. பின்னர் 2014-15-ம் ஆண்டிலிருந்து இந்த பற்றாக்குறை விகிதத்தை அரசு வெற்றிகரமாக குறைத்து வருகிறது. 2018-19-ம் ஆண்டு முடிவில் நிதி பற்றாக்குறை விகிதம் 3.3 சதவீதமாக இருக்குமாறு வரையறுத்துள்ளோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு ரிசர்வ் வங்கியில் இருந்து நிதி எதுவும் கேட்கவில்லை எனக்கூறியுள்ள சுபாஷ் சந்திரா கார்க், ரிசர்வ் வங்கியின் பொருத்தமான பொருளாதார மூலதன கட்டமைப்பை வரையறுப்பது தொடர்பான பரிந்துரை மட்டுமே தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சிறு, குறு தொழில்துறையினருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் விரைவில் ஆலோசனை சலுகைகள் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
சிறு, குறு தொழில்துறையினருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் சலுகைகள் கிடைக்குமா? என தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
2. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை நிலை நிறுத்துவேன் : புதிய கவர்னராக பொறுப்பேற்ற சக்தி காந்ததாஸ் பேட்டி
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை நிலைநிறுத்துவேன் என்று அதன் புதிய கவர்னராக பொறுப்பேற்ற சக்தி காந்ததாஸ் கூறினார்.
3. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா என செய்தி நிறுவனம் தகவல்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
5. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
நாளை ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டையும், இந்திய பொருளாதாரத்தையும் மதிப்பிடும் நாளாக இருக்கும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.