தேசிய செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ‘பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருக்கிறார்கள்’ - சிவசேனா தாக்கு + "||" + 'People are waiting to punish Prime Minister Modi' in remedial action - Shiv Sena

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ‘பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருக்கிறார்கள்’ - சிவசேனா தாக்கு

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ‘பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருக்கிறார்கள்’ - சிவசேனா தாக்கு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருப்பதாக சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட 2 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே கூறியதாவது:-

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையின் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்திருப்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறிவிட்டார்.


பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பயங்கரவாதம் ஒழியும், கள்ள நோட்டுகள் ஒழியும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் கூறியது நடந்ததாக தெரியவில்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. இதற்காக பிரதமர் மோடியின் அரசை தண்டிக்க மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் இடையே தற்போது நிலவும் சர்ச்சையால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

சிவசேனாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஷிஸ் தியோ ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசின் நீண்டகால கூட்டாளியான சிவசேனா பணமதிப்பு நீக்க தோல்வி குறித்து துல்லியமாக உண்மையை வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலத்திலும் பா.ஜனதாவும், சிவசேனாவும் ஒரே படகில் தான் பயணிப்பார்களா அல்லது வேறு பாதையை தேர்ந்தெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதற்கு காலம் தான் பதில் செல்லும் என்று அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது - சத்ருகன் சின்கா
மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது என சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.
2. கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
3. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
4. சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.
5. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? - அமித்ஷா எச்சரிக்கை
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.