தேசிய செய்திகள்

17-ந் தேதி பயணம்: மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறார் + "||" + Modi will participate in the Maldives' reception ceremony

17-ந் தேதி பயணம்: மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறார்

17-ந் தேதி பயணம்: மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறார்
வரும்17-ந் தேதி மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த அப்துல்லா யாமீனை எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சோலி தோற்கடித்தார். புதிய அதிபராக சோலி 17-ந் தேதி பதவி ஏற்கிறார்.


அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதற்காக ஒரு நாள் பயணமாக அவர் 17-ந் தேதி மாலத்தீவுக்கு செல்கிறார். அவர் பிரதமராக அங்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். இத்தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.