தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: புல்வமா அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 terrorists have been killed in the encounter between security forces and terrorists in Tikun village of Pulwama district

ஜம்மு காஷ்மீர்: புல்வமா அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: புல்வமா அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் புல்வமா அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள திகுன் என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின், அப்பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் கிராமத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் உள்பட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகள் இருவரும் உள்ளூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. என்கவுண்டரையடுத்து அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை, பாஜக 2 இடங்களில் முன்னிலை
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
4. சிறுமி பாலியல் பலாத்காரம்: ஸ்ரீநகரில் முழு அடைப்பு
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஸ்ரீநகரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
5. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.