தேசிய செய்திகள்

அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு + "||" + Probe ordered after 15 newborns die in Assam hospital in six days

அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு

அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு
அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்கட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1 முதல் 6 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததும், இவ்விவாகாரம் குறித்து சுகாதாரத்துறை விசாரணையை துவங்கியுள்ளது. 

குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை மருத்துவமனை நிர்வாகம் அமைத்துள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் சவுரவ் பர்கோடி, மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சவுரவ் பர்கோடி அளித்த பேட்டியில், சிலசமயம் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். அப்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நோயாளிகள் என்ன நிலையில் வருகிறார்கள் என்பதை சார்ந்து இந்த விகிதம் அமைகிறது. மிக குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம். இவை போன்ற சூழலில், அந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன” என்றார்.