தேசிய செய்திகள்

முன்னாள் ஊழியரால் டாடா ஸ்டீஸ் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக்கொலை + "||" + Tata Steel Subsidiary Manager Shot Dead In Faridabad By Ex-Employee: Cops

முன்னாள் ஊழியரால் டாடா ஸ்டீஸ் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக்கொலை

முன்னாள் ஊழியரால் டாடா ஸ்டீஸ் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக்கொலை
முன்னாள் ஊழியரால் டாடா ஸ்டீஸ் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பரிதாபாத்,

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் டாடா ஸ்டீல் (டிஎஸ்பிடிஎல்) நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மூத்த மேலாளர் அரிந்தம் பால் நேற்று மதியம் தனது அறையில் வழக்கமான பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் ஊழியர் விஷ்வாஷ் பாண்டே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அரிந்தம் பாலை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அரிந்தம் பால் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான விஷ்வாஷ் பாண்டே, 2015 முதல் டிஎஸ்பிடிஎல் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் மேலாளரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.