மாநில செய்திகள்

48 மணி நேரத்தில் வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் + "||" + The possibility of form a storm in the Bay of Bengal in 48 hours: Meteorological Center

48 மணி நேரத்தில் வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

48 மணி நேரத்தில் வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
48 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் கூறியதாவது:- 

நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது தென் கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த புயல் 14-ம் தேதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும். 

இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, ஆந்திர கடலோர பகுதிகளின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

 மாலத்தீவு, குமரி கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. ஒடிசாவில் பானி புயலால் வீடு சேதம் கழிவறையில் குடும்பத்துடன் வசிக்கும் முதியவர்
ஒடிசாவில் பானி புயலால் வீடு சேதம் அடைந்ததால் கழிவறையில் முதியவர் குடும்பத்துடன் வசிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
3. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. ஒடிசாவில் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு -மீட்பு பணிகள் தீவிரம்
ஒடிசாவில் பானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
5. நாகையில், 6 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் மீன் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு
நாகையில் 6 நாட்களுக்கு பிறகு நேற்று பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீன் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது.