தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம் + "||" + Army soldier killed in Pakistan sniper fire in J&K's Rajouri

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத முறையில் விதிமீறலில் ஈடுபடும் வகையில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது.

எனினும் இந்த சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதனை ராணுவ தரப்பும் உறுதி செய்துள்ளது.  ஜம்முவின் அக்னூர் பிரிவில் இதேபோன்ற சம்பவம் ஒன்றில் நேற்று இந்திய ராணுவத்தின் சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் கடந்த 2 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியாவில் இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
2. ஸ்ரீநகர் துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார்.
3. மேட்டுப்பாளையம் அருகே: துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம் - தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
மேட்டுப்பாளையம் அருகே விவசாயிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. அரியானா: பாதுகாவலரால் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி பலி
அரியானாவில் பாதுகாவலரால் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி உயிரிழந்தார். விடுமுறை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு நீதி கேட்டு லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு நீதி கேட்டு, லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.