மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; அமைச்சர் உதயகுமார் + "||" + We are ready to face the North East monsoon; Minister Udayakumar

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; அமைச்சர் உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; அமைச்சர் உதயகுமார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கூறியதாவது:- 

நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது தென் கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த புயல் 14-ம் தேதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும். 

இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, ஆந்திர கடலோர பகுதிகளின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

தென் தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பருவமழையை எதிர்கொள்வது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், நிவாரண முகாம்கள், மீட்புகுழுக்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு உள்ளது என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் பாதிப்பு: நாகையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் போக்குவரத்து, மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2. புயல் காற்று வீச தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - அமைச்சர் உதயகுமார்
புயல் காற்று வீச தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
3. கஜா புயல் : நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் காரணமாக நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
4. நெல், கரும்பு, சோள பயிர்களில் புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் - தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுரை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல், கரும்பு, சோள பயிர்களை புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது.
5. 26-ந்தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
26-ந்தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.