உலக செய்திகள்

ஜோர்டானில் கனமழைக்கு 11 பேர் பலி; 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் வெளியேற்றம் + "||" + Floods in Jordan kill 11

ஜோர்டானில் கனமழைக்கு 11 பேர் பலி; 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் வெளியேற்றம்

ஜோர்டானில் கனமழைக்கு 11 பேர் பலி; 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் வெளியேற்றம்
ஜோர்டானில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.
அம்மான்,

ஜோர்டான் நாட்டில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 11 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு உதவ சென்றுள்ளன.

இந்த கனமழையால் பெட்ரா நகரின் சில பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள வாடி மூசா பாலைவன பகுதிகளில் 4 மீட்டருக்கும் கூடுதலாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதில் வாகனங்கள் பல மூழ்கியபடி உள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து பாலைவன நகரான பெட்ராவில் இருந்து ஏறக்குறைய 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளம்; 40 பேர் பலி
இந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.
2. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3. மேற்கு தொடர்ச்சி மலையில் 4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் 4 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
4. ஐதராபாத் தேசிய பூங்காவில் மரம் விழுந்து சுற்றுலாவாசி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஐதராபாத் நேரு தேசிய பூங்காவில் கனமழையால் மரம் விழுந்து பலியான நபரின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
5. பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.