தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனம்; 50 வயதுக்குட்பட்ட 500 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு + "||" + Over 500 menstrual-age women book e-tickets for darshan at Sabarimala: Police

சபரிமலை தரிசனம்; 50 வயதுக்குட்பட்ட 500 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

சபரிமலை தரிசனம்; 50 வயதுக்குட்பட்ட 500 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு
சபரிமலை தரிசனத்திற்கு செல்ல 50 வயதிற்கு உட்பட்ட 500 பெண்கள் ஆன்லைன் வழியே முன்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அடுத்து சபரிமலை கோவிலுக்கு செல்ல நவம்பர் 16ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கான புனித யாத்திரை காலம் வருகிற 17ந்தேதி தொடங்குகிறது.  இதற்காக ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  அதன்படி கடந்த அக்டோபர் 30ந்தேதியில் இருந்து காவல் துறைக்கான ஆன்லைன் வலைதளம் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்கள் இதில் முன்பதிவு செய்துள்ளனர் என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்பொழுது, இதில் நிறைய பெண் பெயர்கள் உள்ளன.  அவை உண்மையானவையா அல்லது ஒரே நபரால் பதிவு செய்யப்பட்டவையா என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை.

இந்த வலைதளத்தில் முன்பதிவு செய்வது இலவசம் என்பதனால் பணம் செலுத்த வேண்டியது இல்லை.  பணம் செலுத்தினால் கிரெடிட் கார்டு வழியே முன்பதிவு செய்வோரின் அடையாளம் தெரிய வரும் என அவர் கூறினார்.

நிலக்கல்லில் இருந்து பம்பா பகுதிகளுக்கு யாத்திரை செல்வதற்கு அரசு பேருந்து டிக்கெட் இல்லையெனில் இந்த இலவச முன்பதிவு செல்லுபடியாகாது.  தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை செல்லவே அனுமதி உள்ளது.

எனினும், முன்பதிவு செய்த 539 பேரும், அரசு பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என்று கூறினார்.  ஆனால் சிலர் நடந்து செல்ல விரும்பினால் அவர்களை பேருந்தில் பயணம் செய்யும்படி வற்புறுத்த முடியாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தாலியை சுமக்காத பெண்கள்
திருமணங்கள் பொதுவாக சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்தவைகளாக இருக்கின்றன. தாலிகட்டுதல், அதில் முக்கியமானதாக இருந்து கொண்டிருக்கிறது.
2. சபரிமலை: கத்தியால் தங்கள் உடலை கீற 20 பக்தர்கள் தயாராக இருந்தனர் - போராட்டக்குழு தலைவர் தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து இருந்தால், கத்தியால் தங்கள் உடலை கீறி ரத்தம் சிந்தி கோவிலை மூட வைக்க 20 பக்தர்கள் திட்டமிட்டு இருந்ததாக போராட்டக்குழு தலைவர் தெரிவித்தார்.
3. ‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் நடிகை ராகிணி திவேதி சொல்கிறார்
‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் என்று நடிகை ராகிணி திவேதி கூறினார்.
4. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கேரள அரசு முறையிடக்கோரி வேலூரில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை
திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.