மாநில செய்திகள்

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி + "||" + Coalition who is doing good to Tamils; Chief Minister Palanisamy

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி
தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம் என முதல் அமைச்சர் பழனிசாமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
கோவை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசும்பொழுது, தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.

அ.தி.மு.க.வுக்கு முதல் துரோகி டி.டி.வி. தினகரன்தான்.  அ.தி.மு.க.வை உடைக்கும் பணியில் டி.டி.வி. தினகரன் ஈடுபட்டு வருகிறார்.  18 எம்.எல்.ஏ.க்களாலேயே அவர்களின் தொகுதி முடக்கப்பட்டு உள்ளது.  துரோகம் செய்த காரணத்தினால் இறைவன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டி உள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் தொய்வு இன்றி அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன  18 தொகுதிகள் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் அனைத்து திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.  தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு எந்த தொழிலாளர்களும் செல்லவில்லை என கூறினார்.

தொடர்ந்து அவர் சர்க்கார் பட விவகாரம் பற்றி பேசும்பொழுது, தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள்.

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள், தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள்.  இந்த பிரச்னை சுமுகமாக முடிந்து விட்டது.  அதனை தொடர்ந்து பெரிதுப்படுத்த வேண்டாம்.

கோடி, கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது?  ரூ.100 டிக்கெட்டை ரூ.1,000க்கு விற்பனை செய்து ரசிகர்களின் ரத்தத்தினை உறிஞ்சுகிறார்கள்.

வேண்டுமென்றே சில நடிகர்கள் தங்களை வளப்படுத்த திட்டமிட்டு இதுபோன்று செய்து வருகிறார்கள்.  இயக்குநர் ஏ.ஆர். முருகதாசின் உறவினர்கள் கூட இலவச பொருட்களை வாங்கி உள்ளனர் என கூறியுள்ளார்.

அதன்பின்னர் நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசிய அவர், சினிமாவில் ஓய்வு பெற்று தற்பொழுது அரசியலில் நாடகம் நடத்த கமல் வந்துள்ளார்.  அவரது அரசியல் நாடகம் எடுபடாது.

ஒரு படத்திற்கு ரூ.100 கோடி வரை வாங்குபவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளனர்?  நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமலால் மக்களின் பிரச்னையை எப்படி தீர்க்க முடியும்.

அரசியலோ, சினிமாவோ உழைத்தால்தான் முன்னுக்கு வர முடியும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்; முதல் அமைச்சர் பழனிசாமி
தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தின்பொழுது பேசினார்.
2. அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.
3. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்கின்றன: முதல்வர் பழனிசாமி
கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்கின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
4. தே.மு.தி.க. விரைவில் தங்களது கூட்டணியில் இணையும்; தமிழிசை சவுந்தரராஜன்
தே.மு.தி.க. விரைவில் தங்களது கூட்டணியில் இணையும் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
5. விமானத்தில் இயந்திர கோளாறு; பாதியிலேயே சென்னை திரும்பினார் முதல் அமைச்சர் பழனிசாமி
தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் முதல் அமைச்சர் பழனிசாமி பாதியிலேயே சென்னை திரும்பினார்.