டென்னிஸ்

ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி + "||" + Tamil Nadu's Fahad Mohammed wins tennis title

ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி

ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி
மும்பையில் நடந்த ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி பெற்றுள்ளார்.
மும்பை,

மும்பையில் ஜே.எஸ். பெரேரா நினைவு ஏ.ஐ.டி.ஏ. தரவரிசை ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழகத்தின் பஹத் முகமது மற்றும் மகாராஷ்டிராவின் அதர்வா சர்மா விளையாடினர்.

இந்த போட்டியில் 22 வயது நிறைந்த முகமது 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 18 வயது நிறைந்த அதர்வாவை வீழ்த்தி பட்டத்தினை வென்றுள்ளார்.

சென்னையில் உள்ள டென்னிஸ் அகாடெமி ஒன்றில் பயிற்சி பெற்றவரான முகமது முதல் செட்டை 45 நிமிடங்களில் கைப்பற்றினார்.  தொடர்ந்து 2வது செட்டை 32 நிமிடங்களில் வென்று பட்டத்தினை தட்டி சென்றார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற முகமது ரூ.26 ஆயிரம் பரிசு தொகை மற்றும் கோப்பையும், 2வது இடம் பிடித்த அதர்வா ரூ.18 ஆயிரம் பரிசு தொகையும் பெற்றனர்.

முகமது மற்றும் அதர்வா ஆகியோர் ஏ.ஐ.டி.ஏ. தரவரிசையில் முறையே 30 மற்றும் 22 புள்ளிகளை பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது
நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
2. பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
3. நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது: ஞானதிரவியம் (தி.மு.க.) - 5,22,623 மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)-3,37,166
நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் 5,22,623 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 3,37,166 வாக்குகளும் பெற்றனர்.
4. கரூர் தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 2½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.