தேசிய செய்திகள்

டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல் + "||" + Leaders against BJP in Delhi on October 22 - Chandrababu Naidu Information

டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல்

டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை  - சந்திரபாபு நாயுடு தகவல்
பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.
அமராவதி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தூதராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அமராவதியில் சந்தித்து பேசினார்.


பின்னர், சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் எண்ணற்ற தலைவர்களை சந்தித்து விட்டேன். மம்தா பானர்ஜியை 19 அல்லது 20-ந் தேதி சந்திக்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிரான இந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 22-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில், அணியை முன்னெடுத்து செல்வது பற்றியும், அமைப்புரீதியான கட்டமைப்பை உருவாக்குவது பற்றியும், எதிர்கால நடவடிக்கை பற்றியும் முடிவு எடுக்கப்படும். தொகுதி பங்கீடு பற்றி சிறிது காலத்துக்கு பிறகு விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்ற ஓவிய கண்காட்சிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்ற ஓவிய கண்காட்சிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கரீனாவை களமிறக்குகிறது?
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.
3. டெல்லியில் கடும் பனி மூட்டம்: 11 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், 11 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
4. பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு: பா.ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைக்கும் - மத்திய மந்திரி பஸ்வான் சொல்கிறார்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு, வருகிற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
5. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 27 தொகுதிகளில் வெற்றிப்பெறும் - சிவராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 27 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.