உலக செய்திகள்

அமெரிக்காவில் காட்டுத்தீயின் பிடியில் கலிபோர்னியா மாகாணம் + "||" + California is the state of the wildfire in the United States

அமெரிக்காவில் காட்டுத்தீயின் பிடியில் கலிபோர்னியா மாகாணம்

அமெரிக்காவில் காட்டுத்தீயின் பிடியில் கலிபோர்னியா மாகாணம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், காட்டுத்தீயின் பிடியில் சிக்கி உள்ளது. இதில் 9 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாகி விட்டன.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் காட்டுத்தீயின் பிடியில் சிக்கி உள்ளது என்று கூறத்தக்க விதத்தில் 3 இடங்களில் பெரிய அளவில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

அந்த மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8-ந்தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானது.


இந்த தீயில் சிக்கி 6 ஆயிரத்து 700-க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து உருக்குலைந்து போய்விட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட்டனர்.

இந்த காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 9 பேர் பலியாகினர். அவர்களில் 5 பேர் தங்கள் கார்களின் அருகிலும், 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் எரிந்து கரிக்கட்டைகள் போல கிடந்ததாக பட்டி கவுண்டிஷெரீப் கோரி ஹோனியா கூறினார்.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட போது 3 வீரர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்களில் 35 பேர் காணாமல் போய் விட்டனர். அவர்கள் கதி என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த காட்டுத்தீயினால் பாரடைஸ் என்ற நகரம், நரகம் ஆகி விட்டது.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஊல்சி காட்டுத்தீ, ஹில் காட்டுத்தீ என இரண்டு இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. பெரிய அளவில் தீ பரவி வருகிற 3 இடங்களிலும் சேர்த்து இதுவரை 2½ லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹில் காட்டுத்தீயும் 15-ந்தேதி முதல் பரவி வருவதாக இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவுசண்ட் ஓக்ஸ் நகர் அருகே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஊல்சி காட்டுத்தீ நேற்று முன்தினம் 101-ம் எண் நெடுஞ்சாலைக்கு பரவியது. அங்கிருந்து கடலோர பகுதிகளுக்கு பரவி வருகிறது. ஏறத்தாழ 35 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்த தீயின் பிடியில் சிக்கி இருக்கிறது.

அடுத்த கட்டமாக மாலிபு என்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிக்கும் அது பரவுகிறது. இந்த மாலிபு பகுதியிலும், அதையொட்டிய கேலாபசாஸ் பகுதியிலும் ஏராளமான பிரபலங்கள் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

டி.வி. நட்சத்திரம் கிம் கர்டாஷியான் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், கேலாபசாஸ் பகுதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வெளியே சென்று திரும்பியுள்ள நிலையில் ஒரு மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும், ஒவ்வொருவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லேடி காகா என்ற பாடகி, மாலிபு பகுதியில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக சமூக வலைத்தளம் ஒன்றில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட இயக்குனர் கெய்லர்மோ டெல் டோரா, தனது பிளிக் ஹவுஸ் இல்லத்தை விட்டு வெளியேறி விட்டதாக டுவிட்டரில் கூறி உள்ளார்.

இந்த தீ விபத்தில் வெஸ்ட்வோர்ல்ட் டி.வி. தொடர் படப்படிப்பு தளங்களில் ஒன்று எரிந்து நாசமாகி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3 இடங்களிலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக எண்ணுகிறது- டொனால்டு டிரம்ப் கோபம்
அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
2. பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையில் ‘உறுதியான எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை’ அமெரிக்கா அறிவிப்பு
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
3. சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம் வடகொரியா முடிவு
சீனாவில் இருந்து கடந்த மாதம் 16–ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது.
4. அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் : டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது.