மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Dr. Ramadas assertion to the federal government

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 60.13 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

வழக்கமாக பெட்ரோல் விலையும், டீசல் விலையும் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடும். ஆனால், அக்டோபர் 29-ந்தேதிக்குப் பிறகு இந்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை. அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்காததால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதைப் போலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இதனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடியை சட்டவிரோத லாபமாக குவித்து வருகின்றன.

2014-2016-ம் ஆண்டு காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன் களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்திருக்கிறது. இதைவிட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.

மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.- டாக்டர் ராமதாஸ்
தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
2. பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட் : டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்
பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார்.
3. தேர்தல் கூட்டணி, பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
தேர்தல் கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
4. ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...