உலக செய்திகள்

அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விரைவில் பூமியில் மோதக்கூடும் விஞ்ஞானிகள் கணிப்பு + "||" + Approaching dark matter hurricane will collide with earth, predict scientists

அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விரைவில் பூமியில் மோதக்கூடும் விஞ்ஞானிகள் கணிப்பு

அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விரைவில் பூமியில் மோதக்கூடும்  விஞ்ஞானிகள் கணிப்பு
அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விரைவில் பூமியின் மீது மோதக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பால்வெளி வழியாக நகரும் போது நம்பமுடியாத வகையில் வேகமாக வரும் அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விரைவில் பூமி மோதக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

வானியியலாளர்கள் இந்த அறியப்படாத பருப்பொருள்  சூறாவளி  விநாடிக்கு 500 கிலோ மீட்டருக்கும் அதிக வேகத்தில் பயணிக்கிறது என கணித்து உள்ளனர்.  சூரிய மண்டலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகக் கொந்தளிப்பான விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றாக இது  இப்போது கருதப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு சேதமும் ஏற்படாததால், பீதி அவசியமில்லை என்று வல்லுனர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.

உண்மையில், இந்த வேகமான அறியப்படாத பருப்பொருள் சூறாவளி பகுப்பாய்வு விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மிகவும் மர்மமான துகள்கள் பற்றி மேலும் அறிய உதவ முடியும்.

பூமியின் மீது மோதும்  இந்த அறியப்படாத பருப்பொருள் சூறாவளியை  நாம் பார்க்க அல்லது உணர முடியாது என்று குறிப்பிட்டார். ஆனால் அறியப்படாத பருப்பொருள்  விஷயங்களை நேரடியாக கண்டறிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அறியப்படாத பருப்பொருள் குறித்து  தெரியவில்லையென்றால் இந்த வானியல் வல்லுனர்கள் இந்த மோதல் குறித்து எப்படி முன்னறிவித்தார்கள் என்றால் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கையா  செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை பயன்படுத்திதான்.

இந்த இருண்ட அறியப்படாத பருப்பொருள்  சூறாவளி  பூமியில் எந்த  பேரழிவுகளையும் ஏற்படுத்தாது என்று வல்லுனர்கள்  தெளிவுபடுத்தியிருந்தாலும், இந்த விசித்திரமான விண்வெளி நிகழ்வுகள் ஒரு உடனடி வெளிப்படுத்துதலின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்று உறுதியான சதி கோட்பாட்டாளர்கள்  வாதிடுகின்றனர். இந்த சதித்திட்ட கோட்பாட்டாளர்களில் சிலர், எந்த ஆதாரமும் இல்லாமல், இந்த அண்ட நிகழ்வுகள் விளைவிக்கும் நிபுரு  என்ற கிரகத்தின் எக்ஸ் வருகை என்று நம்புகிறார்கள்.

உண்மையை நீங்கள் 'அறியப்படாத பருப்பொருள்  சூறாவளி' என்ற வார்த்தையை கேட்கும்போது பயப்பட வேண்டிய அவசியமில்லை, மாறாக இந்த நிகழ்வு நவீன விஞ்ஞானத்திற்குப் பயனுள்ளது ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

1. செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா
14 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்து உள்ளது நாசா. #NASA
2. விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார் காஸ்மிக் கதிர்களால் பாதிப்பு
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார், காஸ்மிக் கதிர்களால் பாதிக்கப்படும் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
3. ஆண்களின் மூளையை விட இளமையாக இருக்கும் பெண்களின் மூளை -ஆய்வில் தகவல்
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
4. பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது
பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் டேட்டா மற்றும் வரைபடம் வெளியிடபட்டு உள்ளது.
5. பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாறை அங்கு எப்படி சென்றது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.