மாநில செய்திகள்

கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Cyclone Gaja Set To Hit Tamil Nadu Today, Schools To Stay Shut

கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு அருகே 380 கி.மீட்டர் தொலைவிலும், நாகை அருகே 400 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும். புயல் கரையைக்கடக்கும் போது வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரெயிலில் சரக்கு கட்டணம் இல்லை - ரெயில்வே நிர்வாகம்
கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் நிவாரண உதவி - அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
3. நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
4. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது - அமைச்சர் உதயகுமார்
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
5. ’கஜா’ புயல் பாதிப்பு : திரையுலக பிரபலங்கள் நிதி உதவி
’கஜா’ புயல் பாதிப்புக்கு திரையுலக பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.