தேசிய செய்திகள்

சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு + "||" + Sabarimala row: TDB to move SC on Monday

சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு

சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு
சபரிமலை விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கோரி சுப்ரீம்கோர்ட்டை நாட தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
பம்பை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 17–ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10–50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அய்யப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அப்போது கடும் மோதலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு நடையை திறந்தார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று கோ‌ஷங்களை எழுப்பினர். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு கோவில் நடை திறக்கப்படுவது இது 3–வது முறையாகும்.

அத்தாழ பூஜை முடிகிற அடுத்த மாதம் 27–ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பிறகு நடை மூடப்படும். பின்னர் மகர விளக்கிற்காக டிசம்பர் 30–ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14–ந் தேதி மகர விளக்கு பூஜைக்கு பின்பு ஜனவரி 20–ந் தேதி கோவில் நடை மூடப்படும். 

இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரும் திங்கள் கிழமை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி
காலவ மகரிஷியின் மகளாக இருந்த லீலாவதி, ஒரு சாபத்தின் காரணமாக அசுர குலத்தில் மகிஷியாகப் பிறந்தாள். அவள் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக வித்தியாசமான வரம் ஒன்றை பிரம்மனிடம் கேட்டுப் பெற்றிருந்தாள். ‘சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறந்த பன்னிரண்டு வயது பாலகனால் மட்டுமே தன் அழிவு இருக்க வேண்டும்’ என்ற வரம் அது.
2. சபரிமலை, அயோத்தி பிரச்சினையில் பா.ஜனதா அரசியல் செய்கிறது தேவேகவுடா கடும் தாக்கு
சபரிமலை, அயோத்தி பிரச்சினையில் பா.ஜனதா அரசியல் செய்வதாக தேவேகவுடா கடுமையாக தாக்கி பேசினார்.
3. சபரிமலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியது, பா.ஜனதா
சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பாஜக துவங்கியுள்ளது.
4. சபரிமலை தந்திரிகளை விட கழுதைகளுக்கு கருணை அதிகம் : கேரள அமைச்சர் பேச்சால் சர்ச்சை
சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிகளை விட அங்குள்ள கழுதைகளுக்கு கருணை அதிகம் என கேரள அமைச்சர் சுதாகரன் பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
5. சபரிமலையில் போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி வரை நீட்டிப்பு
சபரிமலையில் போடப்பட்டுள்ள போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.