தேசிய செய்திகள்

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்; 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி + "||" + Cong releases 2nd list for Raj, Manvendra Singh to take on Vasundhara Raje

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்; 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்; 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவுக்கு எதிராக முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
புதுடெல்லி,

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெறுகிறது.  இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த வியாழ கிழமை இரவு வெளியிட்டது.

தொடர்ந்து 2வது பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டார்.

இதில், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங்கை, ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.

அவர் ஜல்ராபதன் தொகுதியில் போட்டியிடுகிறார்.  பா.ஜ.க.வின் ஷியோ தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மன்வேந்திரா சிங், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த செப்டம்பரில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த தேர்தலில், அசோக் கெலாட், சச்சின் பைலட் மற்றும் சி.பி. ஜோஷி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைந்தார்! பாஜக ஒருவரின் கட்சி என விமர்சனம்
பாஜகவில் இருந்து விலகிய சத்ருகன் சின்கா, காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
2. நாடாளுமன்ற தேர்தல்; கமல்நாத் மகன் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்த்வாரா தொகுதியில் போட்டி
மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மகனுக்கு காங்கிரஸ் கட்சி சிந்த்வாரா மக்களவை தொகுதியை ஒதுக்கியுள்ளது.
3. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள் நிறைந்தது: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள், பாசாங்குதனம் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
4. அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி ஹாட்ரிக் தோல்வி அடைவார்; காங்கிரஸ் கட்சி
அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானி ஹாட்ரிக் தோல்வி அடைவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
5. நாடாளுமன்ற தேர்தல்; அசோக் கெலாட், ஜஸ்வந்த் சிங் மகன்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பு
நாடாளுமன்ற தேர்தலில் அசோக் கெலாட், ஜஸ்வந்த் சிங் மகன்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது.