தேசிய செய்திகள்

“முஸ்லீம் வாக்கு வங்கி” காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீடியோவால் சர்ச்சை + "||" + Controversy Over Kamal Naths Video On Muslim Votes

“முஸ்லீம் வாக்கு வங்கி” காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீடியோவால் சர்ச்சை

“முஸ்லீம் வாக்கு வங்கி” காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீடியோவால் சர்ச்சை
முஸ்லீம் வாக்கு வங்கி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேச்சு அடங்கிய வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28–ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. விவசாயிகள் விவகாரங்களால் விமர்சனங்களை பா.ஜனதா எதிர்க்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜனதா போட்டி பிரசாரம் மேற்கொள்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வீடியோவின் உண்மைத்தன்மை தெளிவாகவில்லை.

முஸ்லீம்களின் வாக்கு வங்கியை 90% கைப்பற்ற வேண்டும் என்று கமல்நாத் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

முஸ்லீம்களின் அதிகமான வாக்கை பெறாவிட்டால் காங்கிரசுக்கு பின்னடைவாக அமையும் என்று அவர் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. 

காங்கிரஸ் மத ரீதியில் பிரசாரம் மேற்கொள்கிறது என்பதற்கு வீடியோவே ஆதாரம் என பா.ஜனதா கூறியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் வெற்றி; பா.ஜனதா முதல்வர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்
சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா முதல்வர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
2. மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டியை நோக்கி முன்னிலைப் பெற்றது காங்கிரஸ்
மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டியை நோக்கி காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
3. காங்கிரசுக்கு ஆதரவு அளித்து மாயாவதி மத்திய பிரதேசத்தின் கிங் மேக்கராவாரா ?
காங்கிரசுக்கு ஆதரவு அளித்து மாயாவதி மத்திய பிரதேசத்தின் கிங் மேக்கராவாரா ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
4. உர்ஜித் படேல் ராஜினாமா; பா.ஜனதா அரசு மற்றொரு நிறுவனத்தை இழிவுபடுத்தி உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஆர்.பி.ஐ.யை இழிவுபடுத்தியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்
ரபேல் போர் விமான ஒப்பந்தம், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.