உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவருக்கு பதில் வேறு படம் ஹேக்கர்கள் கைவரிசை + "||" + SOMEONE HACKED DONALD TRUMP’S WIKIPEDIA PAGE, REPLACED PHOTO WITH IMAGE OF PENIS

அமெரிக்க அதிபர் டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவருக்கு பதில் வேறு படம் ஹேக்கர்கள் கைவரிசை

அமெரிக்க அதிபர்  டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவருக்கு பதில் வேறு படம் ஹேக்கர்கள் கைவரிசை
அமெரிக்க அதிபர் டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவர் இருக்கும் புகைப்படத்திற்கு பதிலா ஹேக்கர்கள் அசிங்கமான புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்ததால், அதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக  2017-ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதிபர்  தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற கிளாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கபட்ட போது  இவர் வெற்றி பெற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார். அதன் பின் இவர் எது செய்தாலும், சர்ச்சையில் போய் முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு முடிவும் யோசிக்காமல்   எடுப்பதால், அது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்து விடுகிறது.

இதனால் பலரும் டிரம்ப் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆப்பிள் போனில் இருக்கும் சிரி ஆப்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பற்றி கேட்ட போது, அவருடைய விக்கிப்பிடியாவில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக, மிகவும் அசிங்கமான புகைப்படம் வந்துள்ளது. இது ஹேக்கர்களின் வேலையாகத் தான் இருக்கும் எனவும், கடந்த வியாழக்கிழமை பார்த்த அனைவருக்கும் இந்த புகைப்படம் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இது சரி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 2016-ஆம் ஆண்டு கிளாரி கிளிண்டனின் விக்கிபிடியாவும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் சிறப்பானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
2. டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்
டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. டிரம்ப்- கிம் இடையேயான சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும் என அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
4. டிரம்ப் உரையின் போது தூங்கி வழிந்த சிறப்பு விருந்தினர் ஜோஷ்வா டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜோஷ்வா டிரம்ப், டிரம்ப் உரையின்போது தூங்கி வழிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
5. டிரம்ப் - கிம் இடையேயான 2 வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் இடையேயான 2 வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...