உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல் - 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு + "||" + In Afghanistan Action Attack - 72 Taliban terrorists killed

ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல் - 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல் - 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில், 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
கஜினி,

ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில், நவா, கிலான், கோக்யானி மாவட்டங்களில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் அதிரடி தாக்குதல்கள் நடத்தின.

இந்த தாக்குதல்கள், தலீபான் பயங்கரவாதிகளுக்கு பலத்த அடியாக அமைந்தது.


நவா மாவட்டத்தில் 20 பேர், கிலான் மாவட்டத்தில் 40 பேர், கோக்யானி மாவட்டத்தில் 12 பேர் என மொத்தம் 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். தலீபான் பயங்கரவாதிகளின் 3 கனரக வாகனங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள், ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

தங்கள் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ள தலீபான் பயங்கரவாதிகள், 9 பேர் மட்டுமே பலியானதாக தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் : அமெரிக்கா வான் வழி தாக்குதலில் தலிபான் முக்கியத் தளபதி பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2. ஆப்கானிஸ்தான்: வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி
ஆப்கானிஸ்தானில், ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலியாயினர்.
3. ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படைகள் தாக்குதல்: குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் 23 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த கூட்டுப்படைகள் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் 23 பேர் பலியாகி உள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் 22 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை வாகனத்தை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில், அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தார்.