கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி பேட்டிங் + "||" + First Test against Australia: Indian team batting

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. INDVSAUS
அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.


இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில்  முரளிவிஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.

இரு அணிகளிலும் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்:-

இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, ரிஷாப் பான்ட், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, முகமது ‌ஷமி.

ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.