கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம் + "||" + IND vs AUS: india is in a deep trouble, after loses a virat kohli wicket

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி 

தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
அடிலெய்டு, 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார். 

இந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில்  காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். ரகானே 13 ரன்களில் வெளியேறினார்.  அடித்து விளையாடிய ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா, நிதானத்துடனும் நிலைத்து நின்றும் ஆடி வருகின்றார். இந்திய அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களுடன் தடுமாறி வருகிறது. புஜாராவும், ரிஷாப் பாண்டும் களத்தில் விளையாடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட் அவுட் ஆனது.
2. உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதியில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.
3. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு
பெர்த் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
5. இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி சுயேட்சையிடம் படுதோல்வி
இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜஸ்தானில் சுயேட்சையிடம் படுதோல்வி அடைந்தார்.