மாநில செய்திகள்

மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் கடிதம் + "||" + Regarding the Megadeth Dam Chief Minister of Palani Letter from Karnataka Water Resources

மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் கடிதம்

மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர்  கடிதம்
மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,

மேகதாது அணை திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்களுடன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருவில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம்  ஒன்று எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-

கர்நாடக மக்களுக்கு மேகதாது அணை எந்த அளவுக்கு தேவை என்பதை தமிழகத்திற்கு விளக்க விருப்பம். மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம். மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை விவகாரம்: 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் ஆய்வு கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவகுமார்
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
2. மேகதாது அணை விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை
மேகதாது அணை விவகாரத்தில், சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
3. மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை - கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி அறிவிப்பு
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்தார். அப்போது, “மேகதாது திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
4. மேகதாது அணை விவகாரம்; கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.