மாநில செய்திகள்

வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + We supported and implemented the Tamil Nadu government's resolution MKStalin

வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி
வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. தீர்மானத்திற்கு டிடிவி தினகரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம். கண்டன தீர்மானமாக இதனை நிறைவேற்ற கோரினேன், ஆனால் அதனை ஏற்கவில்லை என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை