தேசிய செய்திகள்

மைக்கேல் நாடு கடத்தல்; நிலைகுலைந்த காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் குழுவை அனுப்புகிறது: பா.ஜ.க. + "||" + Congress 'completely rattled' by Michel's extradition; sends lawyers to defend him: BJP

மைக்கேல் நாடு கடத்தல்; நிலைகுலைந்த காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் குழுவை அனுப்புகிறது: பா.ஜ.க.

மைக்கேல் நாடு கடத்தல்; நிலைகுலைந்த காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் குழுவை அனுப்புகிறது:  பா.ஜ.க.
இடைத்தரகர் மைக்கேல் நாடு கடத்தலால் முழுவதும் நிலைகுலைந்து போயுள்ள காங்கிரஸ் கட்சி அவரை காக்க வழக்கறிஞர்கள் குழுவை அனுப்புகிறது என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதனால் பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.

பின்னர் டெல்லி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.  மைக்கேலை ஜாமீனில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் 10ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி கூறினார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் செய்தி தொடர்பு அதிகாரி சம்பீத் பத்ரா இன்று கூறும்பொழுது, மைக்கேலுக்காக இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்ஜோ கே. ஜோசப் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.  அவரை காங்கிரஸ் கட்சி நீக்கி விட்டது.

மைக்கேல் நாடு கடத்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியானது முழுவதும் நிலைகுலைந்து உள்ளது.  அவர்களுக்கு காரணம் தெரியும்.  மைக்கேலை காக்க அவர்கள் வழக்கறிஞர்கள் குழுவை அனுப்புகின்றனர் என கூறியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் மைக்கேலுக்காக ஆஜராகும் முன் கட்சியிடம் வழக்கறிஞர் ஜோசப் ஆலோசனை மேற்கொள்ளவில்லை.  அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு: சர்ச்சையில் மன்மோகன் சிங் படம்
காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, மன்மோகன் சிங் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
2. முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது என பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
3. சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலைமறியல்
சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4. ரபேல் விவகாரம்; காங்கிரஸ் கட்சி அறிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது: ராணுவ மந்திரி
ரபேல் போர் விமான விலை பற்றி காங்கிரஸ் கட்சி அறிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5. “ஜனநாயகம் வென்றது” காங்கிரஸ் மகிழ்ச்சி
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-