தேசிய செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை - கர்நாடகா அரசு அறிவிப்பு + "||" + The dam will never give up Karnataka Government Announcement

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை - கர்நாடகா அரசு அறிவிப்பு

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை - கர்நாடகா அரசு அறிவிப்பு
மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பெங்களூரு,

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக மந்திரி சிவக்குமார் பேசியதாவது:

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது. நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும்.

வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றார்.