தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் அமித்ஷா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி மறுப்பு: மேல்முறையீடு செய்ய பாஜக முடிவு + "||" + Red flag for Amit Shah’s Bengal rath yatra from court, upset BJP to appeal

மேற்கு வங்காளத்தில் அமித்ஷா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி மறுப்பு: மேல்முறையீடு செய்ய பாஜக முடிவு

மேற்கு வங்காளத்தில் அமித்ஷா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி மறுப்பு: மேல்முறையீடு செய்ய பாஜக முடிவு
மேற்கு வங்காளத்தில் அமித்ஷாவின் ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது.
கொல்கத்தா, 

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் 3 ரத யாத்திரைகளை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளார். இதில் முதல் யாத்திரை கூச்பெகரில் நாளை 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக இருந்தது.

ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.