தேசிய செய்திகள்

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு + "||" + Rs 1 crore reward on Sidhu s head for insulting Yogi Adityanath by Hindu Yuva Vahini

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு
யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ, 
 
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில மந்திரியுமான சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்ட சித்து ராம்கஞ்ச் மண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியையும், உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து இந்து யுவவாகினி அமைப்பு சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது.  

‘‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து யுவவாகினி ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், ‘‘சித்து பாகிஸ்தானை புகழ்கிறார். சொந்த நாட்டுக்கு எதிராக பேசுகிறார். இது மன்னிக்க முடியாதது. அவர் பாகிஸ்தானுக்கு போய் விடட்டும் அல்லது நாங்கள் அவரை இந்தியாவில் வாழ விட மாட்டோம்’’ என குறிப்பிட்டார்.

இந்து யுவவாகினி அமைப்பு 15 வருடங்களுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. கும்பலால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்தினருடன் உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்திப்பு
கும்பலால் கொல்லப்பட்ட காவலர் குடும்ப உறுப்பினர்களை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2. சர்ச்சை அதிகரித்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் - சித்து
பாகிஸ்தான் பயணம் தொடர்பாக சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் ராகுல் காந்திதான் என்னை அனுப்பினார் என்று சித்து கூறியுள்ளது மேலும் சர்ச்சை அதிகரிக்க செய்துள்ளது.
3. காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்பட சர்ச்சை “ஒவ்வொரு நாளும் ஆயிரம் புகைப்படம் எடுக்கப்பட்டது” சித்து பதில்
காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம் வெளியான சர்ச்சைக்கு சித்து பதிலளித்துள்ளார்.
4. அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் கட்டப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
5. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.