தேசிய செய்திகள்

நாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை + "||" + Girl commits suicide after playing deadly on-line games

நாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை

நாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை
நாக்பூரில் இணையதள விளையாட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாக்பூர், 

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12–ம் வகுப்பு முடித்த அவருக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை. இதனால் ஒரு ஆண்டு கழித்து தான் விரும்பிய கல்லூரியில் படிக்க முடிவு செய்தார். வீட்டில் தனியாக இருந்த அவருக்கு செல்ல பிராணிகளும், செல்போனும் மட்டுமே துணையாக இருந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் கையில் ‘வெளியேற இந்த இடத்தில் வெட்ட வேண்டும்’ என எழுதி இருந்தது.

அவர் நீலதிமிங்கலம், மோமோ போன்ற உயிரை கொல்லும் இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்தது தெரியவந்தது. அதற்கு அடிமையாகி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.