தேசிய செய்திகள்

கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்பு + "||" + Nirav Modi's illegal bungalow in Alibaug razed: Govt to HC

கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்பு

கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்பு
கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடித்து தள்ளப்பட்டதாக மும்பை ஐகோர்ட்டில் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
மும்பை, 

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்று அலிபாக் கடற்கரையோரத்தில் இருந்தது. இந்த பங்களா கடற்கரை மண்டல விதிகளை மீறி, சட்ட விரோதமாக கட்டப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, நிரவ் மோடியின் சட்டவிரோத பங்களா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 

இதன்படி மராட்டிய அரசு சார்பில் ஐகோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அலிபாக் கடற்கரையோரத்தில் இருந்த நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களா கடந்த 5-ந்தேதி இடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.
2. அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது; ஏ.ஆர். முருகதாஸ்
அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ஏ.ஆர். முருகதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3. சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்த முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; அரசு தரப்பு
சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் ரூ.56¾ கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை
நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமாக இந்தியா மற்றும் பிறநாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது.
5. நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி பதில்
நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்துள்ளார்.