மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம் + "||" + petrol price cut 42 paise

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகளும் குறைந்துள்ளன.
சென்னை,

’கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இன்று சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.57 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.57 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 44 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.19காசுகளாக உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...