மாநில செய்திகள்

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள் + "||" + List of fastest growing cities in the economy 3 towns in Tamilnadu

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 தமிழக நகரங்கள் இடம் பெற்று உள்ளன.
புதுடெல்லி,

சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் முதல் இருபது இடங்களில் 17 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் நான்காவது இடத்திலும் உள்ளது.

ஆறாவது இடத்தில் திருப்பூரும், எட்டாவது இடத்தில் திருச்சியும் உள்ளது. இந்தப்பட்டியலில் சென்னைக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.