மாநில செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ந்தேதி சோனியாவை சந்தித்து அழைப்பு விடுக்கிறார் ஸ்டாலின் + "||" + Karunanidhi statue opening ceremony: December 9th Sonia calls and calls

கருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ந்தேதி சோனியாவை சந்தித்து அழைப்பு விடுக்கிறார் ஸ்டாலின்

கருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ந்தேதி சோனியாவை சந்தித்து அழைப்பு விடுக்கிறார் ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார். #Karunanidhistatue
சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
 
வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ள  எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும்  ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...