தேசிய செய்திகள்

காலை 11 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 21.89 சதவீத ஓட்டுப்பதிவு + "||" + Voter turnout recorded till 11.00 am in Rajasthan Elections 2018 is 21.89%

காலை 11 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 21.89 சதவீத ஓட்டுப்பதிவு

காலை 11 மணி நிலவரப்படி ராஜஸ்தானில்  21.89 சதவீத ஓட்டுப்பதிவு
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.89 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. இங்கு தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்ற காங்கிரசும் கடும் போட்டியில் உள்ளன. பாரதீய ஜனதாவுக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 6.11 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.

ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள 106 ஆம் எண் வாக்குச்சாவடியில்  காங்கிரஸ் தலைவர்  அசோக் கெய்க்லாட் வாக்களித்தார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஜெய்ப்பூரில் 252வது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கதாரியா  உதய்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரில் 128வது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 253, 254வது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. 

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 172வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு  மாற்றப்பட்டுள்ளது.

ஜாலாவாரில் உள்ள ஜல்பராதன் தொகுதி வாக்குச்சாவடியில் ராஜஸ்தான் முதல் மந்திரி  வசுந்தரா ராஜே சிந்தியா வாக்களித்தார்.

ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 6.11 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி  21.89 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; சச்சின் பைலட் 8 சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க 8 சுயேச்சைகளுடன் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2. பா.ஜ.க முன்னாள் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரசில் சேருகிறார்
ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னாள் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரசில் சேர உள்ளார்.