தேசிய செய்திகள்

தனது உடல் பற்றிய கருத்து : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வசுந்தரா ராஜே சிந்தியா + "||" + 'I feel insulted, EC should act': Vasundhara Raje on Sharad Yadav's body-shaming remark

தனது உடல் பற்றிய கருத்து : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வசுந்தரா ராஜே சிந்தியா

தனது உடல் பற்றிய கருத்து : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வசுந்தரா ராஜே சிந்தியா
தனது உடல் பற்றிய கருத்து கூறிய சரத்யாதவ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல் - மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 6.11 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.

ஜாலாவாரில் உள்ள ஜல்பராதன் தொகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் ராஜஸ்தான் முதல் மந்திரி  வசுந்தரா ராஜே சிந்தியா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின் போது பீகார் அரசியல்வாதி சரத்யாதவ்  தனது உடல் குறித்து வெளியிட்ட  பேச்சுக்கு  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில்  ஒரு முன்மாதிரியாக இந்த வகையான  பேச்சுக்கு  தேர்தல் ஆணையம் நடவடிக்கை  எடுப்பது முக்கியம் ஆகும்.

நான் இதை அவமானமாக கருதுகிறேன். பெண்களை அவமானப்படுத்தியதாக கருதுகிறேன் என கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது சரத்யாதவ் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். ராஜஸ்தான் முதல் மந்திரி  வசுந்தரா ராஜே சிந்தியா உடல் எடை அதிகரித்து உள்ளதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். பின்னர் தான் அதை  நகைச்சுவைக்காக கூறியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.