தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் + "||" + In sterile issue Regarding the incident The CBI can not be prohibited to investigate Supreme Court

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.  இது  தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டது. இதனை  எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், 

இது சட்டம், ஒழுங்கு பிரச்சினையே தவிர, போராட்டத்தின் பின்னணியில் நக்சலைட்டுகள் இல்லை.  போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது  என கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்,  ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என  மறுப்பு தெரிவித்துள்ளது.