தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர் + "||" + Union minister Nitin Gadkari faints while on stage at Maharashtra event

மராட்டியத்தில் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்

மராட்டியத்தில் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்
மராட்டியத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மும்பை,

அகமத்நகரில் நடைபெற்ற விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட நிதின் கட்காரி மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை மேடையில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் பிடித்துக் கொண்டார். மேடையில் பேசிவிட்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பினார். பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்பட்ட போது மயக்கமடைந்தார். உடனடியாக நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் ஷீரடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “சர்க்கரையின் அளவு குறைந்தது காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். என்னை மருத்துவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். இப்போது நன்றாக உள்ளேன். என்னுடைய நலம் விரும்பிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது: நிதின் கட்காரி விளக்கம்
விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
2. விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு
ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை கடித்துக்கொன்ற சிறுத்தை !
மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியை சிறுத்தை அடித்துக்கொன்றது
4. மராட்டியம்; ராணுவ தளவாட மையம் அருகே வெடி விபத்து: 6 பேர் பலி, பலர் காயம்
மராட்டிய மாநிலத்தில் ராணுவ தளவாட மையம் அருகே வெடி விபத்து ஏற்பட்டது.
5. அன்னிய தொழில் முதலீட்டில் மராட்டியம் பின்தங்கி விட்டது : அசோக் சவான் குற்றச்சாட்டு
அன்னிய தொழில் முதலீட்டில் மராட்டியம் முதலிடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு பின்தங்கி விட்டதாக அசோக் சவான் குற்றம் சாட்டினார்.