தேசிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் காணவில்லை பாட்மின்டன் வீராங்கனை ஜுவ்லா கட்டா குமுறல் + "||" + Today we went to cast vote but my name was also missing Jwala Gutta

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் காணவில்லை பாட்மின்டன் வீராங்கனை ஜுவ்லா கட்டா குமுறல்

வாக்காளர் பட்டியலில் எனது பெயர்  காணவில்லை பாட்மின்டன் வீராங்கனை ஜுவ்லா கட்டா குமுறல்
வாக்காளர் பட்டியலில் எனது பெயரை காணவில்லை என்று பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவ்லா கட்டா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று காலை  ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு  தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிகிறது. 

இந்நிலையில் வாக்குசாவடிக்கு சென்ற பிரபல  பாட்மின்டன் வீராங்கனை ஜுவ்லா கட்டா அவரது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  அதனை தொடர்ந்து  ஓட்டுப்போடாமல் திரும்பினார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில்  எனது பெயரும், எனது அம்மா பெயரும் இடம்பெற்று இருந்தது. என்னுடைய அப்பா பெயரும், தங்கையின் பெயரும் விடுபட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று காலை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முயன்றபோது வாக்குச்சாவடியில் எனது பெயரை காணவில்லை.  

எனது பெயர் காணாமல் போனது எப்படி என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் கடந்த 12 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் இப்படி மாயமாக மறைந்தால், தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும் என கேள்வி எழுப்பி உள்ளார்.