கிரிக்கெட்

இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் சச்சின் தெண்டுல்கர் டுவீட் + "||" + TeamIndia should make the most of this situation and not lose their grip Sachin Tendulkar ‏

இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் சச்சின் தெண்டுல்கர் டுவீட்

இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் மிகச்சிறப்பாக  செயல்பட வேண்டும் சச்சின் தெண்டுல்கர் டுவீட்
இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் அறிவுரை வழங்கி உள்ளார்.
புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. 

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.  2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் 59 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் மிகச்சிறப்பாக  செயல்பட வேண்டும். குறிப்பாக நீங்கள் உங்கள் பிடியை இழக்ககூடாது. தற்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளையாடி வரும் தடுப்பு ஆட்டத்தை என் அனுபவத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை. அஸ்வின் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் ஆட்டத்தால் இந்தியா முன்னிலை வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.