தேசிய செய்திகள்

புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம் + "||" + Krishnamurthy Subramanian appointed as Chief Economic Advisor

புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசின் தலைமைப்பொருளாதார அலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு மே மாதம் வரையில் இருந்த போதிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதனையடுத்து காலியாக இருந்த தலைமைப்பொருளாதார ஆலோசகர் பதவிக்கு சிறந்த பொருளாதார வல்லுனர்கள் பெயரை மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது. 

உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஐதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பெயரும் முன்னிலையில் இருந்தது.

இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார் எனவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சிகாகோவில் முனைவர் பட்டம் பெற்றவர். செபி கமிட்டு உறுப்பினராகவும் உள்ளார். பந்தன் வங்கி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் மற்று ஆர்.பி.ஐ. அகாடமி ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...