தேசிய செய்திகள்

மோடியின் இந்தியாவில் இவிஎம்மிற்கு மர்மமான சக்தி, எச்சரிக்கையாக இருங்கள் : கட்சி தொண்டர்களுக்கு ராகுல் அட்வைஸ் + "||" + Stay alert, EVMs have mysterious powers in Modi's India Rahul to party workers

மோடியின் இந்தியாவில் இவிஎம்மிற்கு மர்மமான சக்தி, எச்சரிக்கையாக இருங்கள் : கட்சி தொண்டர்களுக்கு ராகுல் அட்வைஸ்

மோடியின் இந்தியாவில் இவிஎம்மிற்கு மர்மமான சக்தி, எச்சரிக்கையாக இருங்கள் : கட்சி தொண்டர்களுக்கு ராகுல் அட்வைஸ்
மோடியின் இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மர்மமான சக்தியுள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள் என கட்சியின் தொண்டர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியை எழுப்பி வருகிறது. இந்நிலையில் ஐந்து மாநில தேர்தல் நடக்கிறது. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே கட்சி தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். 

ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வித்தியாசமான முறையில் கையாளப்பட்டது. சில பஸ்சில் திருடப்பட்டது, இரண்டு நாட்கள் மறைக்கப்பட்டது. சில கைதவறிச் சென்றது. அவை ஓட்டல்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோடியின் இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தியுள்ளது,” எச்சரிக்கையாக இருங்கள் என தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார். நவம்பர் 28-ம் தேதி மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற பின்னர் 48 மணி நேரங்கள் கழித்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக வெளியான மீடியா செய்தியை குறிப்பிட்டு ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.